சபாநாயகரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அறிவித்தல்!

எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விவாதத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான விசேட விவாதம் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எனவே இந்த நாடாளுமன்ற அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.