நாட்டில் வீதி விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், நாள் தவறாது ஊடகங்களில் வாகன விபத்துகள் தொடர்பிலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் செய்திகளை பார்க்க முடிகின்றது.
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான போக்குவரத்து சட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், முச்சக்கர வண்டி ஒன்றின் சாரதி மிகவும் பொறுப்பற்ற தன்மையுடன் செயற்படும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இலங்கையை பொறுத்தவரையில் முச்சக்கர வண்டி ஒன்றில் மூன்று பேருக்கு மேல் பயணிப்பது குற்றமாகும். எனினும், இந்த முச்சக்கர வண்டியில் மூன்று பேருக்கு அதிகமாக பிள்ளைகளை சாரதி ஏற்றிச்செல்கின்றார்.
அத்துடன், மேலும் இரண்டு பெண் பிள்ளைகளை தமது இருக்கைக்கு அருகாமையில் அமரச்செய்து அழைத்து செல்வதுடன், தொலைபேசியில் உரையாடியப்படி முச்சக்கர வண்டியை செலுத்துக்கின்றார்.
போக்குவரத்து சட்டங்கள் நகர்புறங்களில் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், கிராமபுறங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதாக சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட போவது சிறுவர்கள் தான். எனவே இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.