நார்வே ராஜ குடும்பம் அளித்த விருந்தில் கலந்து கொண்ட கேட் மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார்.
1984ஆம் ஆண்டு இளவரசி டயானா நார்வே ராஜ குடும்பத்தை சந்தித்து சரியாக 34 வருடங்கள் ஆன பிறகு இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் நார்வேக்கு வருகை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே மன்னர் Harald ராணி Silvia பட்டத்து இளவரசர் Haakon அவரது மனைவி Mette-Marit ஆகியோருடன் நேரத்தை செல்வளித்த இளவரசரும் இளவரசியும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்.
ஒவ்வொரு நிகழ்வின்போது இளவரசி கேட் அணிந்திருந்த உடைகள் பெரிதும் பாராட்டுக்குள்ளாகின.
ஏழு மாத கர்ப்பிணியான இளவரசி கேட், தனது கணவருடன் ராஜ விருந்தில் பங்கேற்றபோது அவர் அணிந்திருந்த பீச் நிற உடையுடன் மகாராணியின் கம்மலும் அவர் தனது திருமணத்தின்போது அணிந்திருந்த braceletம் பலரது கவனத்தைக் கவர்ந்தன.
புதனன்று Stockholmஇல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேட் அணிந்திருந்தநீல நிற Erdem உடையும் அதற்கு முன் தினம் அவர் அணிந்திருந்த பூக்கள் பதித்த உடையும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஏனென்றால் அவர் வழக்கமாக நேர்த்தியான கோடுகளும் குறைந்த அளவு பூ வேலைப்பாடும்கொண்ட உடைகளையே அணிவது வழக்கம். என்றாலும் பத்திரிகைகள் அவரது உடையை புகழ்ந்து தள்ளின.
ராஜ விருந்திற்கு கேட்டை மன்னரும், வில்லியத்தை ராணியும் கரம்பிடித்து அழைத்துச் சென்றனர்.
விருந்திற்குப் பிறகு ராஜ குடும்பத்தினருடன் இணைந்து கேட்டும் வில்லியமும் பொது மக்களை சந்தித்தனர். அப்போது கேட் அணிந்திருந்த ஃபர் தொப்பி அவரது அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது.
இரு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் முதன்முதலாக வில்லியமும் கேட்டும் சந்தித்துக் கொண்ட இடத்திற்கு சென்ற இருவரும் மலரும் நினைவுகளில் ஆழ்ந்தனர். அங்கு உடற்பயிற்சி செய்யும் பைக் ஒன்றில் அமர்ந்த இளவரசரின் உற்சாகத்தைக் கண்ட இளவரசி நாணமுற்றார்.
ராஜ குடும்பத்தைக் காண திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் பலர் கேட்டுக்கு மலர்களையும் வில்லியமுக்கு புத்தகங்களையும் பரிசளித்தனர். பலர் கேட்டுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கெஞ்சினர்.
இளவரசர் மற்றும் இளவரசியின் நார்வே பயணத்தை அடுத்து ராஜ அரண்மனை வெளியிட்ட செய்தி ஒன்றில் ராஜ கும்பத்தினர் Sweden மற்றும் Norway நாட்டு மக்களுடன் நீண்ட கால நட்பு கொண்டிருப்பதை விரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.