சாலை விதிகளை தயவு செய்து மதியுங்கள் என பொலிசாரும் சரி,போக்குவரத்து கழகமும் சரி, எவ்வளவு தான் சொன்னாலும்,அதற்கெலாம் பலரும் இன்றளவும் மதிப்பது இல்லை.
அதற்கு உதாரணமாக சாலைகளில் நாம் செல்லும் போது ஒரு சிலர் எப்படி எல்லாம் வேகமாக வண்டி ஓட்டி வந்து விபத்துக்களை ஏற்படுத்து வார்கள் தெரியும் தானே..
இதெற்கெல்லாம் ஒரு மாறுதலாக,தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பல்வேறு நபர்களால் பகிரப்பட்டு வரும் வீடியோ இதுதான்.
வேகமாக லாரி ஒட்டும் போது, திடீரென ஓட்டுனர் எழுந்து,வலது பக்க கதவை திறந்து, முன்பக்கமாக கண்ணாடி வழியாக வேகமாக வந்து,பிறகு இடது பக்கமாக உள்ளே வருகிறார் ஓட்டுனர்.அதுவரை, அந்த ஸ்டியரிங் அப்படியே ஆடாமல் இருக்க,வண்டியும் நேராக சென்று உள்ளது.
இந்த 10 செகண்டில்,எதாவது விபரீதம் ஏற்பட்டு இருந்தால் என்னவாகும்,.?அதே வேளையில் இப்படி ஒரு விளையாட்டா..?இது போன்று விபரீதமான ஒன்றை செய்ய கூடாது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.