சீகிரிய ஓவியங்கள் அழிந்து போகும் ஆபத்து!!

சீகிரிய ஓவியங்களில் மீண்டும் பூஞ்சை ஒன்று ஏற்பட்டுள்ளதால், அந்த ஓவியங்கள் அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 1962 ஆம் ஆண்டு ஓவியங்களை தார்வீசி அழிக்க முயற்சித்ததால் ஏற்பட்ட பூஞ்சை என தெரியவந்துள்ளது.

இதற்கு சில வருடங்களுக்கு முன்னரும் இந்த நிலைமை ஏற்பட்டது. அப்போது இரசாயனம் ஒன்றை பயன்படுத்தி அது தடுக்கப்பட்டது. தற்போதும் பூஞ்சைகள் மீது தடவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்த வார இறுதிக்குள் பூஞ்சை பரவுவதை தடுக்க முடியும் என மத்திய கலாச்சார நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்ணாடி சுவர் பகுதியில் உள்ள ஓவியங்களிலேயே பூஞ்சை ஏற்பட்டுள்ளதாகவும் காலநிலை காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் எனவும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கிறிஸ்சாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.