தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைத்து யாழில் சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையின் 70ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் யாழ். மாவட்ட செயலகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வகையில் பொலிஸ் மற்றும் முப்படையின் அணிவகுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

மேலும், அங்கு தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.