பேச்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அதிகாலையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள நிறுவனத்தின் உரிமையாளரின் வீடும் வெள்ளவதையிலுள்ள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் வீடும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் பேச்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பேச்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.