முச்சக்கர வண்டி ஒன்று ரயியிலுடன் மோதியமையினால் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், முச்சரக்கர வண்டி மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.