உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெலிக்கந்த பொலிஸ் பிரிவில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு கடந்த 2ஆம் திகதி, ஆதரவாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வெலிக்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.