கணவன், மனைவி மீது கத்தி குத்து தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவரது கணவர் கத்தியால் வெட்டியுள்ளார்.

26 வயதான பெண் மீது நேற்று மாலை கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்குச் சென்று திரும்பும் வழியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயங்களுக்கு உள்ளான பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.