கூகிளில் ஏற்பட்ட மாற்றம் இலங்கையின் சுதந்திர தினத்திற்காக…!!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இலங்கை சுதந்திர தினத்திற்காக கூகிள் தேடு பொறியில், மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய google.lk பக்கம், இலங்கை தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம் கூகிள் தேடுதல் பக்கத்தில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.