இலங்கையின் 70ஆவது சுதந்திர தின வைபவம் இன்று காலை மன்னாரில் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற குறித்த சுதந்திர தின நிகழ்வில் 8.40 மணியளவில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
பின் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளில் முப்படை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.