ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவர் கைத செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல துபாய் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போதே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்கவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.