தேங்காய் எண்ணையில் கற்பீரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிஹ்டு நேரம் வைத்திருந்தால் வலி குறையும்.
வெயில் சூட்டினால் வயிற்று வலிக்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்கவைத்து, பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டு சாப்பிர வயிற்றி வலி நீங்கும்.
ரோஜா இதலுடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறைவதோடு, வாய் மணக்கும்.
செம்பருத்தி இலையை தூள் செய்து இரண்டு வேலையும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தினமும் சோப்பிற்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
வெள்ளை பூண்டை வெற்றிலையில் சேர்த்து மசிய அரைத்து தோலில் சேர்த்து குளித்து வர தேமல் சரியாகும்.
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடித்தால் வரட்டு இருமல் சரியாகும்.