புற்றுநோயை எதிர்த்து 14 ஆண்டுகள் போராடினேன்!! வென்ற நடிகையின் அனுபவம்!

பிப்ரவரி 4-ஆம் திகதியான இன்று உலக புற்றுநோய் தினமாகும். இந்நோயை எதிர்த்து 14 ஆண்டுகள் போராடி அதிலிருந்து மீண்டவர் நடிகை கவுதமி.

பல ஆண்டுகளாக புற்றுநோயின் கொடுமைகளை எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி கவுதமி உலக நாடுகளில் சுற்றுபயணம் செய்துவருகிறார்

நோய் பாதிப்பு குறித்த தனது அனுபவங்களை கவுதமி பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு இந்நோய் வந்து 14 ஆண்டுகள் ஆகிறது. முதலில் என் உடலில் கட்டி தோன்றிய நிலையில் அது புற்றுநோய் கட்டியாக இருக்குமா என நான் சந்தேகித்தேன்.

மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது நான் நினைத்த மாதிரியே எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது.

நான் அடிக்கடி டென்ஷனாகும் இயல்புகொண்டவள் என்பதால் அதன் காரணமாக கூட எனக்கு புற்றுநோய் வந்திருக்கலாம்.

அப்போது என் மகள் குழந்தையாக இருந்ததால், அவளுக்காக வாழ்ந்தாக வேண்டும் என எனக்கு நானே உறுதி செய்துகொண்டு நோயை எதிர்த்து போராட தொடங்கினேன்.

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து ஒருவழியாக அதிலிருந்து மீண்டேன்.

புற்றுநோய் தாக்கியவர்களுக்கு நான் சொல்வது இதை தான், நோய் வந்துவிட்டாலே நம் வாழ்க்கை அவ்வளவு தான் என விரக்தி கொள்ளாதீர்கள்.

சிலருக்கு சூழ்நிலை காரணமாக புற்றுநோய் வந்துவிட்டால், அதற்காக அவர்கள் கலங்கிப் போய் பயந்துவிடக் கூடாது, துணிச்சலாக எதிர்த்து போராட வேண்டும் என கூறியுள்ளார்.