அமெரிக்க ஜனாதிபதி ஸ்டேட் ஆப் யூனியனில் ஆற்றிய உரைக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றினார்.
அப்போது, தன்னுடைய நிர்வாகம் வலிய, பாதுகாப்பான, பெருமைமிகு அமெரிக்காவை உருவாக்கி வருவதாகவும், அமெரிக்கா குறித்த கனவை வாழ்வதற்கான நேரம் வந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து அடிக்கடி அணு ஆயுத சோதனை மேற்கொள்ளும் வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என்று விமர்சனம் செய்தார்.
வடகொரியா தொடர்ந்து இது போன்ற அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவது, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் குற்றம்சாட்டினார்.
இது குறித்து வடகொரிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், டிரம்ப் தற்பெருமை அடித்துக் கொள்வதாகவும், வடகொரியாவை நோக்கி விரோத மனப்பான்மையை டிரம்ப் வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.