இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் கொலைகளுக்கு எதிராக உண்மையாகவும் நேர்மையாகவும் பேச முடியும் என்றால் முகத்திற்கு நேராக பேச ஒரே மேடைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுத்தமான ஆட்சிக்குள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் கொலைகளுக்கு எதிரான கொள்கைகளை வலுப்படுத்துவதன் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.