உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது 150 கிராம் எடை கொண்ட சிறுநீரகம்.
உலகில் பெரும்பாலோனோர் தங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதை கவனிக்காமலேயே வாழ்கின்றனர்.
இது வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டியிருக்கும்.
“வருமுன் காப்போம்” என்ற அடிப்படையின் கீழ், இதற்கான அறிகுறிகளை ஆராய்ந்து அதற்கு தகுந்த பரிசோதனை செய்து வந்தாலே இப்பிரச்சனையில் இருந்து விடைபெறலாம்.
இதற்கான அறிகுறிகள் என்னவென்றால்
- திடீர் முகம் மற்றும் கால் வீக்கம்
- சிறுநீரில் ரத்தம் கசிவது
- சிறுநீர் கழிக்கையில் சிரமம் ஏற்படுவது
- தூக்கமின்மை
- அடிக்கடி வாந்தி
- பசியின்மை
- உடல் அழற்சி மற்றும் அரிப்பு
- சிறுநீர் குறைவு
இந்த அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெறவேண்டும், தேவைப்படின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகளும், அதிக ரத்தக்கொதிப்பு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.