மார்ச் முதலாம் திகதிக்குள் ராஜபக்‌ஷக்கள் சிறையில்; நீதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

மார்ச் முதலாம் திகதிக்குள் விசேட நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைக்க நடவடிக்கையெடுக்கப்படுமென நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரத்தினப்புரி சீவலி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினப்புரி மாவட்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அந்த கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவிக்கையில்,

திருடர்களை பிடிக்கவில்லையா என என்னிடம் சிலர் கேட்கின்றனர். எவ்வாறாயினும் கடந்த ஆட்சி காலத்தில் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் திகதியாகும் போது விசேட நீதிமன்றத்தின் ஊடாக சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தற்போது சிறிய சிறிய மீன்களே சிக்கியுள்ளன. பெரிய பெரிய திமிங்கிலங்கள் இருக்கின்றன.

இவர்கள் ராஜபக்‌ஷக்களுடன் சகலரையும் உள்ளே போட்ட பின்ன இவற்றை பிடிக்க வேண்டும். இதன்படி ராஜபக்‌ஷக்கள் அனைவரையும் சிறையில் அடைத்த பின்னரே நாம் பின்னால் பார்ப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.