தமிழ் பத்திரிக்கைகள் இரண்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விலை கொடுத்து வாங்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். கரவெட்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தமிழ் பத்திரிக்கைகளை மகிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார். அந்த தகவல் இன்று காலை தான் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன யாழ். வரும் போது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர்கள் முன்னாள் ஜனாதிபதி வந்த போது எங்கே சென்றார்கள் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.