குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்!

சென்னையில் இரண்டாவது திருமணம் செய்ய கோரி பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மகள் தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேத்துப்பட்டை சேர்ந்தவர் கீதா (29), இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீதர் (35) என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு ரோகித் (2) என்ற மகன் உள்ளான், இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஸ்ரீதர் கடந்தாண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கீதாவுக்கு அவரின் பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு கீதா சம்மதிக்காத நிலையில் தனது குழந்தையுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெற்றோர் தொடர்ந்து கீதாவிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது ரோகித்துக்கு கொசு மருத்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் டைரியில் தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை பார்த்த கீதாவின் உறவினர்கள் அவரையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ரோகித் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆபத்தான நிலையில் கீதா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.