தமிழர்களை கொல்லப் போவதாக மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி!

லண்டனில் தமிழர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70 வது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினத்திற்கு எதிராக லண்டனிலுள்ள இலங்கை தூதரத்திற்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் தமிழர்களை பார்த்து கழுத்தை அறுத்து விடுவேன் என அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

தமிழ் மக்களை பார்த்து சைகை மூலம் எச்சரிச்கை விடுத்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வெளிநாடுகளில் இவ்வாறு மோசமாக நடந்து கொள்ளும் இராணுவ அதிகாரிகள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறான தன்மையை வெளிப்படுத்துவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.