விமானத்தில் நடுவானில் உயிருக்கு போராடிய பெண்!

அமெரிக்க விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது வயதான பெண்ணொருவர் மூச்சு விட சிரமப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒர்ணால்டோ நகரிலிருந்து ஜமைக்காவை நோக்கி கடந்த மாதம் 6-ஆம் திகதி ஜெட்புளூ பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.

விமானம் கிளம்பிய 20 நிமிடத்தில் விமானத்தில் இருந்த வயதான பெண்ணொருவர் மூச்சு விடமுடியாமல் திணறினார்.

இதையடுத்து உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்ற விமானத்தில் இருந்த ஜான் பிளானகன் மற்றும் மேத்யூ ஸ்டீவென்சன் ஆகிய இரண்டு மருத்துவர்கள் முன்வந்தனர்.

ஆனால் விமானத்தில் சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் இருப்பதை வைத்து மூதாட்டி சிகிச்சையளிக்க இருவரும் முடிவு செய்தனர்.

அதன்படி, ஒரு டியூப் பையை வெட்டி ஒரு மாஸ்க் போல தயார் செய்து விமானத்தில் இருந்த ஆக்சிஜன் டேங்குடன் ஜான் பொருத்தினார்.

அதிலிருந்து வரும் ஆக்சிஜன் மூலம் மூதாட்டியின் நுரையீரலுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

இப்படியே 45 நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த வந்த ஃபோர்ட் லாடர்டேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்திலிருந்த மூதாட்டில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்களின் சமயோஜித செயல்பாட்டால் மூதாட்டி உயிர் பிழைத்தார். இதன் பின்னர் விமான பயணிகள், ஜான் மற்றும் மேத்யூவுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார்கள்.

இதனிடையில் ஜானின் செயல் பெருமையளிப்பதாக உள்ளது என அவரின் மனைவி ஜீனியா கூறியுள்ளார்.