இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி மீது தாக்குதல்!

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா – வஜிரபுர பகுதியில் வசித்து வரும் 35 வயதான லசந்த டயஸ் என்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத சிலர் நேற்று அதிகாலை 1.30 அளவில் பொல்லுகளை கொண்டு அவரை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இறப்பு வீடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 15 பேர் கொண்ட குழு முன்னாள் புலனாய்வு அதிகாரிகளை தாக்கும் காட்சி பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இறப்பு வீட்டுக்கு சென்றிருந்துடன் மதுபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.