ஜனாதிபதியையும் கிழக்கின் ஆளுநரையும் சந்தித்து மகஜரைச் சமர்ப்பித்த போதிலும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்பதால் எதிர்வரும் தேர்தலை பகிஸ்கரிப்பது குறித்து சிந்திப்பதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பட்டதாரிகளுடனான ஆளுநரின் சந்திப்பானது வெறும் அரசியல் பிரச்சாரமாகவே அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் கருதுகிறது.
எங்காளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான எந்த பதிலையும் வழங்கவில்லை. பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இருந்த போதிலும் இந்த சந்திப்பானது பட்டதாரிகள் தொடர்பான தெளிவான கொள்கை நல்லாட்சிக்கு இல்லை என்பதே உண்மை. இதற்கான பதிலை எதிர் வரும் தேர்தலில் பட்டதாரிகள் வழங்குவார்கள்.
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் எமது பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், இதுவரை காலமும் எங்களுக்கான தீர்வு தரப்படாமல் இருப்பது குறித்தும் விரிவான மகஜர் ஒன்றினை நேரடியாக ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளோம்.
இதைவிடவும் நாட்டில் இவரை விடவும் உயர் பீடம் இல்லை. ஆனால் பட்டதாரிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது ஏன்?? இதற்கான பதிலை நல்லாட்சி கூறவேண்டுமாயின் இந்த தேர்தலை நாம் கேள்விக்குறியாக்க வேண்டும்.
அப்போதுதான் எமக்கான பதில் இந்த நாட்டின் உயர் பீடத்திலிருந்து வரும் என தெரிவித்துள்ளனர்.