ஜோதிகா தமிழ்சினிமாவில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் பாலா இயக்கத்தில் அடுத்த வாரம் நாச்சியார் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஜி.வி குறித்து இவரிடம் கேட்கையில் ‘ஜி.வி முதல் நாளே என்னை கேரவனில் சந்தித்து வாழ்த்தினார்.
இன்றைய இளம் தலைமுறை நடிகர்களிடம் இந்த தன்மை மிக குறைவு, மேலும், ஜி.வியின் அடுத்தக்கட்டத்தை இந்த படத்தில் பார்க்கலாம்’ என்று ஜோதிகா கூறியுள்ளார்.