இலங்கையின் 70ஆவது சுதந்திரம் தினம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
அரசியல் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான வாழ்த்து செய்திகளை பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்றைய தினம் இரவு நேரத்தில் வான வேடிக்கை கொழுத்தி சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட காணொளியொன்றை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் வான வேடிக்கைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டம் என குறிப்பிட்டுள்ளார்.