மொட்டை அடித்து பெற்றோர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட பெண்…. எதற்காக?

மதுரை அருகே உள்ள தன்னூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா அந்த பகுதியில் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரி படிக்கும் அபிநயாவுக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்துள்ளனர்.

அபிநயா காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் வெங்கடேஸ்வரனை தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, அப்பகுதி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

பின்பு பொலிசார் அபிநயா பெற்றோரை வரவழைத்து சமாதானப்படுத்தி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். பெற்றோர்களை நம்பி சென்ற அபிநயா வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். மேலும் அவரை மொட்டை அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அபிநயா கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.