மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்த சம்பவம் தொடர்பாக கைப்பற்ற கமெரா பதிவுகளை விசாரணை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதில் சம்பவம் நடந்த இடத்தில் கடை நடத்தி வரும் முருக பாண்டி என்பவர் கடையை பூட்டிவிட்டு திருஷ்டி சுற்றிய காட்சிகள் பதிவாகியிருந்தது.
30 கடைகள் வரை எரிந்து சாம்பலான கோயில் தீ விபத்தானது திருஷ்டி சுற்றியதால் தான் ஏற்பட்டதா என்பதின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் தற்போது குறித்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.