1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: பக்தர்கள் அதிர்ச்சி!

மயிலாடுதுறையில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பாள் ஆலய அம்மன் சிலைக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற அபயாம்பாள் அம்மன் ஆலயம் உள்ளது.

தை வெள்ளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அபாயாம்பாள் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ராஜ் என்ற அர்ச்சகர் அம்மனுக்கு ஆகம விதிகளுக்கு புறம்பாக சுடிதார் மாலையில் நடைபெற்ற சந்தன அலங்காரத்திற்கு திடீரென்று சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார்.

இதனை கண்ட பக்கதர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களின் வாட்ஸ் ஆஃப்பில் மூலம் பகிர்ந்துக்கொண்டனர்.

தற்போது இந்த சம்பவம் சமூக வளைத்தளங்களின் அம்மன் சுடிதார் அணிந்துள்ள காட்சிகள் வைரலாகி பரவி வருகிறது.

7-ஆம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவெடுத்த அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவாடுதுறை ஆதீனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.