கய்வத்தை பிரதேசத்தில் ஊருக்குள் வந்த சிறுத்தை!

இரத்தினபுரி – பலாங்கொடை, வலேகொட கய்வத்தை பிரதேசத்தில் சுமார் 8 அடி நீளமான சிறுத்தை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

கய்வத்தை பிரதேசத்தில் பெரிய சிறுத்தை இருப்பதை கண்டு பிரதேசவாசிகள் அது சம்பந்தமாக பலங்கொடை வனஜீவராசிகள் திணைக்கள அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அதிகாரிகள், பிரதேச மக்களுடன் இணைந்து சிறுத்தையை பிடித்துள்ளனர். பிடித்த சிறுத்தை மயக்க ஊழி செலுத்தப்பட்டு உடவலவ காப்பக்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை பிரதேசத்தில் வேலி ஒன்றில் சிக்கியுள்ளது. சிறுத்தை மீ்ட்க அதிகாரிகள் மயக்க மருத்தை செலுத்தும் போது சிறுத்தை கால்நடை மருத்துவரை தாக்க முயற்சித்துள்ளது.

வேலியில் சிக்கியதால், சிறுத்தையின் ஊடலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.