கூட்டு அரசிடமிருந்து ஒற்றையாட்சியைக் காப்பது சவாலாக உள்ளதென முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜ பக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றுக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்தபோது இலங்கையின் ஒற்றையாட்சியைப் பாதிக்கும் வகையில் எவ்வித செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. எனினும், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னர் நல்லாட்சியில் ஒற்றையாட்சியைக் காப்பதற்கு போராட வேண்டியுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருமித்த நாட்டில் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்படுவதை அரசும் தமிழ் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள போதும், அவ்வாறான அரசமைப்பை ஏற்படுத்துவது ஒற்றையாட்சியைப் பாதிக்குமென மகிந்த அணியினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.