இன்றைய ராசிபலன் (06/02/2018)

  • மேஷம்

    மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். அமோகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டு மென்ற முடிவிற்கு வருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அனு சரணையாக நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பங்கள் விலகி குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.