வட அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான, பேச்சுவார்த்தைகளை தடை செய்யும் திட்டங்களை அமெரிக்காவின் மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் நிராகரித்து, வாஷிங்டன், 1.2 Trillion டொலருக்கான வர்த்தக உடன்படிக்கையில் இருந்து விலகிவிடும் என தெரிவித்திருந்தார்.
எனினும் வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தம் தொடரும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் , கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ கருத்து தெரிவிக்கையில்,
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(NAFTA) தொடர்பாக, அமெரிக்கா முன்மொழிந்த விடயங்கள் மிகவும் சவாலானது.
அமெரிக்கா வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(NAFTA) தொடர்பாக மோசமான விடயங்களை முன்மொழிந்தாலும், கனடா வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(NAFTA) இன் வழியில் மட்டுமே செல்லும் என தெரிவித்தார்.
கனடாவும், மெக்ஸிகோவும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான(NAFTA) சீர்திருத்தத்திற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளை தீர்க்க முயற்சி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.