தமிழகத்தில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துக் கொண்டு மூதாட்டிகளை தவிக்க விட்டுள்ள மகனின் செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 101 மற்றும் 70 வயதுகளில் இரண்டு மூதாட்டிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரை திருமணம் செய்துள்ளனர்.
இதில் பழனியாம்மாள் என்பவருக்கு குழந்தை இல்லை மற்றொருவருக்கு மகன், மற்றும் மகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்களின் கணவர் இறந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக அவரின் மகன் இவர்களை பார்க்க வரவில்லை. அதுமட்டுமின்றி பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்துக் கொண்டு, ஏமாற்றியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 2010-ஆம் ஆண்டு தங்களுக்கு உரிமையான சொத்துகளை மீட்டுத்தருமாறு பல மனுக்களை கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால் அதில் எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அங்கோ மீண்டும் கோட்டாட்சியரை நாடுமாறு கூறியதால், வேதனையில் தங்களை கருணை கொலை செய்யும் படி கூறியுள்ளனர்.
தற்போது மகளின் பராமரிப்பில் வாழும் இந்த இரு மூதாட்டிகளும், மருந்து செலவுக்குக்கூட பேரனின் வருமானத்தை நம்பிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.