சர்சைக்குரிய பிணை முறி மோசடி மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் தொடர்பான விசேட விவாதத்திற்காக இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் அமர்வுகள் ஆரம்பமாகி மாலை 4 மணியளவில் நிறைவடையவுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான இன்றைய விவாதம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய பிணை முறி மோசடி மற்றும் பாரிய லஞ்சம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு மேலும் இரண்டு நாட்கள் பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.