வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்களா? இல்லையா இந்தக் கேள்விக்கு இருக்கு ஆனால் இல்லை என்ற பதிலையே இதுவரையிலும் விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றனர்.என்றாலும் மறைமுகமாக வேற்றுக்கிரகவாசிகள் இருப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் என்பதே பலரது வாதம். காரணம் இப்போதைக்கு எந்த ஆய்வுக்கும் கொட்டப்படாத பணத்தினை வேற்றுக்கிரக தேடலுக்காக விஞ்ஞானிகள் முன்வைத்து வருகின்றனர்.இல்லாத ஒன்றை இத்தனை சிரமப்பட்டு பணத்தினை வாரி இறைக்கும் அளவிற்கு விஞ்ஞானிகள் ஒன்றும் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் அல்ல என்பது இதனை வலுப்படுத்திவிடும்.இப்போதைக்கு வேற்றுக்கிரகத்தினையும், விண்வெளி பற்றியும் தேடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய தொலைநோக்கி அமெரிக்கா வசமே உள்ளது. செட்டி ( seti telescope அல்லது Allen Telescope Array) எனப்படும் இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியை கண்காணிப்பது மட்டுமல்லாமல் அலைவரிசைகளும் துல்லியமாக கணக்கிடப்படும்.
சுமார் 3235 அடிகள் அளவு பெரிய இந்த தொலைநோக்கி விண்வெளியில் பயணிக்கும் அலைக்கதிர்களை ஆராய்ந்து அதில் வேற்றுக்கிரக சமிஞ்சைகள் இருக்கின்றதா எனவும் ஆய்வு செய்து வருகின்றது.இந்த சக்திமிக்க தொலைநோக்கிக்கு போட்டியாக இன்னுமோர் மாபெரும் தொலைகாட்டியை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதோடு. அதற்கான அனுமதியினையும் பெற்றுவிட்டது.qitai 11om radio telescope (QTT) இந்த தொலைகாட்டி நவீன தொழில்நுட்பத்தோடு கூடியது அதுமட்டுமல்லாது விண்ணில் 75 சதவீதத்தை ஒரே தடவையில் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது.இதன்மூலம் வேற்றுக்கிரக தேடலில் சீனா ஈடுபடவுள்ளது. இந்த அளவுக்கதிகமான ஆய்வும் தேடலுமே வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை உறுதிசெய்துவிடுகின்றன. எனினும் இதனை ஏன் பெறும்பாலான மனிதர்கள் மட்டும் நம்ப மறுக்கின்றனர் என்பது இன்றளவும் கேள்விக்குறியே.