கொழும்பு – கொள்ளுப்பிட்டிஇ வாலுக்காரம வீதியில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றின் குளிர்சாதனப் பெட்டியில் உயிருடன் வைக்கப்பட்டிருந்த எறும்பு திண்ணி என அழைக்கப்படும் அலுங்கு என்ற விலங்கை பொலிஸார் நேற்று மதியம் காப்பாற்றியுள்ளனர்.அலுங்கை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த சீன இனத்தவரான பிரதான சமையல் கலை நிபுணரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கொள்ளுப்பிட்டி பொலிஸார் தேடுதலை மேற்கொண்டு விலங்கை காப்பாற்றியுள்ளனர்.
நான்கு அடி நீளமாக இந்த அலுங்கு 6 கிலோ கிராம் எடை கொண்டது. மிகவும் அரியவகை விலங்கான அலுங்கு இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாகுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருக்கிறார்.