வெற்றிக் தடையாக இருக்கும் கெட்ட பழக்கம் இதுவே!

அனைவருக்குமே கெட்ட பழக்கங்கள் என ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் அந்த கெட்ட பழக்கங்களுக்கும், நமது ராசிக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரியுமா? ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களுககும் ஒவ்வொரு விதமான கெட்ட பழக்கங்கள் இருக்குமாம்.

இந்த கெட்ட பழக்கங்கள் தான், அவர்களது வாழ்வின் முன்னேற்ற காலத்தில் இடையூறை உண்டாக்குகிறது எனவும் ஜோதிடம் கூறுகிறது. இத்தகைய கெட்ட பழக்கங்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் கைவிட்டால், வாழ்க்கை சிறக்கும் எனவும் ஜோதிடம் கூறுகிறது. உங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்த மாதிரியான கெட்ட பழக்கம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இக்கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் எந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட வேண்டுமென தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, வெற்றிக்கு இடையூறாக இருக்கும் அப்பழக்கத்தைக் கைவிட்டு, வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்லுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்கார்களுக்கு பொறுமை என்பதே கிடையாது. வாழ்வில் பொறுமை என்பது மிகவும் அவசியம். பொறுமை இல்லாவிட்டால், அதனால் பல பிரச்சனைகளை மட்டுமே சந்திக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் பொறுமையுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு பிரச்சனையையும் நன்கு பொறுமையாக கையாண்டு தீர்வு காண முடியும். மேலும் பொறுமையைக் கையாண்டால், தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்த்து, வெற்றிப் பாதையில் உள்ள தடைகளை உடைக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அடைப்பட்ட கிளி போல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைத் தவிர்த்து வெளியே நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, வெளியே பல இடங்களுக்குச் சென்று பல நபர்களை சந்தித்து நட்பை வளர்த்துக் கொள்வதென இருக்க வேண்டும். இதை விட்டு யாருடனும் பேசாமல், தனியாகவே இருந்தால், அதனால் முரட்டுத்தனமான நபராகவே இருக்கக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், தங்களது தீர்மானங்களைப் பற்றி வருத்தமாக இருப்பது. இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சிறு விஷயங்களுக்கு கூட முடிவெடுக்க முடியாமல் தவிர்ப்பார்கள். இப்படி தவிப்பதற்கு பதிலாக, அமைதியாக இருந்து நன்கு ஆலோசித்து தீர்வெடுக்க முயற்சிக்க வேண்டும். இதனால் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு எடுக்க முடிவதோடு, வெற்றிக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசாமல் சுற்றி வளைத்து பேசுவார்கள். இப்படி மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசாமல், சுற்றி வளைத்து தங்களது உணர்வை வெளிப்படுத்துவதால், தாங்கள் நினைப்பது நடக்காமல் தோல்வியில் முடியலாம். எனவே வெற்றிக் காண நினைத்தால், வெளிப்படையாக பேசுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தாங்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும். இப்படி தங்களுக்கு தாங்களே முக்கியத்துவம் கொடுப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. மாறாக, தங்களைச் சுற்றியுள்ளதை நன்கு புரிந்து கொண்டு, பின்பு எது முக்கியம் என்பதை நீங்களே புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் நண்பராக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைப் புகழ்பவர்களைச் சுற்றி வைத்துக் கொள்வதால் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதால், வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.

துலாம்

அதிக அன்போடு இருப்பதை இந்த ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும். இந்த பழக்கத்தால், உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் காரியத்தை சாதிப்பதற்காக உங்கள் நன்கு உபயோகித்துக் கொள்வார்கள். இப்படி அவர்களது காரியத்தை சாதிப்பதற்காக நீங்கள் முயற்சித்தால், உங்கள் வாழ்வின் லட்சியத்தை அடைய முடியாமல் செய்துவிடும். எனவே அதைத் தவிர்த்து, உங்கள் மீது, உங்களின் தேவை மீது கவனத்தை செலுத்துங்கள்.

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்கள் பொறாமை குணத்தைத் தவிர்க்க வேண்டும். இப்படி மற்றவர்களது வெற்றி கண்டு பொறாமைப்படுவதற்கு பதிலாக, அவர்களது சந்தோஷத்தைக் கண்டு ஆனந்தப்படுங்கள். இந்த பழக்கம் உங்களை வெற்றிக்கான பாதையில் கொண்டு செல்லும். முக்கியமாக அதிக எதிர்பார்ப்புக்களைத் தவிர்த்து இருந்தால், பொறாமை குணம் நீங்கி, மனம் ரிலாக்ஸாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் எது தெரியுமா? மனதில் இருக்கும் அனைத்தையும் நன்கு வெளிப்படுத்துவார்கள். இப்பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். இப்படி தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் மற்றவர்களிடம் கூறி, தாங்கள் நல்லவர்கள் என்பதை வெளிக்காட்டிக் கொள்வது, அனைத்து நேரங்களிலும் சரிப்படாது. மாறாக, ஒருசில விஷயங்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதால், இது உங்களது வெற்றியில் கவனத்தை செலுத்த உதவும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பதே மிகவும் சிறந்தது. எப்போது ஒருவர் எதிர்மறை எண்ணங்களுடனேயே இருக்கிறாரோ, அப்போது அவர்களது ஆற்றல் திசை திருப்பட்டு, வெற்றிக்கான பாதையில் இருந்து விலக்கும். எனவே எதிர்மறை எண்ணங்களை இந்த ராசிக்காரர்கள் தவிர்ப்பதே நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களிடம் இருக்கும் ஓர் கெட்ட பழக்கம் அதிகமாக உணர்ச்சிவப்படுவது. இந்த ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது உங்களது உணர்ச்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் வேலை மற்றும் வெற்றிக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே இப்படி உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க, தினமும் தியானத்தில் ஈடுபடுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களிடம் இருக்கும் ஓர் கெட்ட பழக்கம் உங்கள் வழிகாட்டியால் பயம் கொள்வது. இப்படி கொண்டால், அதுவே பல காரியத்தைக் கெடுத்துவிடும். எனவே நீங்கள் எதை சரியாக இருக்கும் என நினைத்து அவ்வழியில் செல்ல தீர்மானிக்கிறீர்களோ, அந்த வழியில் அச்சமின்றி செல்லுங்கள்.