மூதாட்டியை பயன்படுத்தி தமிழரசுக் கட்சியினர்!: வாக்கு கிடைக்குமா?? – வீடியோ

தமிழரசுக் கட்சியினர் தங்கள் வீட்டுச்சின்னத்தை உள்ளுார் ஆட்சி தேர்தலில் வெல்ல வைப்பதற்காக பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில்  கடைசிக்கட்ட   தந்திரோபாய   பிரச்சாரமாக  ‘’ஒரு  முதாட்டியை பயன்படுத்தி வீட்டுச் சின்னத்துக்கு தமிழ் மக்களை வாக்களிக்க   தூண்டும்   ஒரு பிரச்சார   யுக்தியை  கையாண்டு, காணொளி  ஒன்றை வெளியிட்டு   சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்கள்   மூலம்   பிரச்சாரத்தை  முன்னெடுத்துள்ளார்கள்.

முதாட்டி ஒருவருக்கு காசுகொடுத்து, சில வசனங்களை எழுதிக்கொடுத்து,  அதை   பாடமாக்கவைத்து   கிளிப்பிள்ளை  சொல்வது போன்று  சொல்லவைத்து  அதை வீடியோவாக பதிவு செய்து    சமூவலைதளங்கள், இணையதளங்களில்  பிரசுரித்துள்ளார்கள்.

சாதாரண   மக்கள்   இக்காணொளியை  பார்வையிடுகின்றபோது   மூதாட்டி சொல்லுகின்ற கதை உண்மை கதைபோன்றுதான் தோன்றும்.

ஆனால்  ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்  தீரவிசாரிப்பதே மெய்”  என்பது பின்பு  தெரியவரும்

இக்காணொளியில் மூதாட்டி சொல்கிறார் தனக்கு வாக்குரிமை கிடைத்த நாள்தொடக்கம் தான் தமிழரசுகட்சிக்கு வாக்களித்துவருவதாக சொல்லுகிறார்.

இது பச்சைபொய்..

தமிழரசுக்கட்சி (வீட்டுச் சின்னம்) 28வருடங்மாக இயங்காமல் இருந்து 2004இல்  தான் புலிகளால் தூசி தட்டி புதுப்பிக்கபட்டது என்பது தொடர்ச்சியாக வாக்களித்து   வருகின்றவர்களுக்கு  நன்றாக தெரியும்

தமிழரசுக்கடசியின்  தொடக்க வரலாறு…

1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் 1976 இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இது தான் வரலாறு.

76 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆண்டுகள்வரை 28 வருடங்களாக இயங்காமல் இருந்த தமிழரசுக்கட்சி வீட்டுச்சினத்துக்கு  பாட்டி தொடர்ச்சியாக  எப்படி வாக்களித்திருபார். ?? இது பச்சை       பொய்தானே ??

இடைப்ட்ட காலத்தில் தமிழர்கள்  உதயசூரியன்   சின்னத்துக்குதான்  வாக்களித்து வந்துள்ளார்கள்.

பச்சை பொய்களை பரப்பி பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்  கட்சியினர்கள் கடைசியில் காணாமல் போவதற்கான சந்தர்பங்களும் உண்டு.

தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து வழிநடத்தியவர்களின் கொள்ளைகைகள் வேறு. இப்பொழுது தமிழரசுக்கடசியை வழிநடத்துபவர்களின்  கொள்கை வேறு.

‘தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெனவும், அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’ இந்த உரிமையை செயற்படுத்தவென தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும்   வடக்கு-கிழக்கில் கூட்டாட்சி அடிப்படையிலான தன்னாட்சி ஏற்பாடு ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிநின்றது….

என்கின்ற தனது அரசியற் கோட்பாட்டினை முன்வைத்ததுதான் தமிழரசுக்கட்சியினர்கள் நீண்டகாலமாக  தமிழ் மக்களின் வாக்குகளை  பெற்றுவந்தார்கள் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

ஆனால் இன்று தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாடு மாறியுள்ளது.

ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டு, தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயவுரிமை, வடகிழக்கு இணைப்புக்கு சாதியமில்லை, காணி அதிகாரமில்லை, பௌத்தத்துக்கு முன்னுரிமை… என்பன போன்ற  அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பை  சிங்கள பேரினவாத கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து நடைமுறைப்படுத்தி,  தங்களுடைய சுயநலவாத, சுகபோக, பதவி சுகங்களை அனுபவிப்பதற்காக தமிழர்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைத்துவிட முனைகிறார்கள் என்பதை தமிழர்கள் சரியாக  புரிந்துகொள்ளவேண்டும்.

நமது கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில், வாக்கு பலத்தை வீணடிக்காமல் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.

 

-கி.பாஸ்கரன்-