ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்வில் இப்படியொரு நிகழ்வை ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பாள்.பேருந்து பயணத்தில், கோவில் நெரிசலில், மருத்துவ பரிசோதனையில், திரையரங்கை விட்டு வெளியேறும் போதென… ஏதாவது ஒரு இடத்தில், ஏதவாது ஒரு தருணத்தில் தனது மார்பகங்களை எவனோ ஒரு கயவன் வேண்டுமென்றே கசக்கி செல்வதை தடுக்க முடியாமல், எதிர்க்க முடியாமல்… துடித்திருப்பாள்!
அப்படி என்ன சுகம் கண்டீர் பெண்களை மார்புகளை தீண்டுவதன் மூலம்? நிச்சயம் இப்படிப்பட்ட செயலை செய்யும் கொடூரர்களை, இத்தகைய செயலை உன் அம்மா, சகோதரியிடம் போய் செய்வாயா என்று கேட்க மாட்டேன்.
ஏனெனில், ஒரு பெண்ணாக அதன் வலி எனக்கு புரியும்.
ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக வெளியே போய்வர ஒரு ஆண் துணை தேவைப்படுகிறது. அதுவும், வேறொரு ஆணிடம் இருந்து பாதுகாக்க. இப்படியான சூழலில் நீ எல்லாம் எப்படி ஆம்பளைன்னு சொல்லிட்டு வெளிய திரியிற என்று தான் கேள்வி கேட்க தோன்றுகிறது.
மறுநாள் மாலை ஷாப்பிங் செல்ல உடன் அழைத்து சென்றான். திரும்ப வரும் போதே, நீயே வண்டி ஓட்டு என்று கூறினான்.
நானும் பைகளை தூக்கி வர இயலாது என்று வண்டியோட்ட சம்மதித்தேன். ஆனால், வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென பின்னாடி இருந்து எனது மாரை தீண்டினான்.
வண்டியை உடனே நிறுத்தி கையை எடு என்றேன்… ஏன் என்றான்… கோவமாக திட்டியவுடன்… ஓ!!! பெரிய மனுஷி ஆயிட்டியா..!!! என்று நகைத்தான்.
அவன் மீது கடுங்கோபம்.. வீட்டில் கூறியிருக்க வேண்டும். ஆனால், எப்படி இதுகுறித்து பேசுவது என்று கூறவில்லை. அதன் பிறகு அவன் என்னிடம் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை.
ஆகையால் அவனை பெற்றி அம்மாவிடம் கூறாமல் விட்டுவிட்டேன். ஆனால், மறுமுறை பாட்டி வீட்டுக்கு சென்ற போதுதான்.
அவன் மற்ற உறவுக்கார பெண்களிடமும் அப்படி நடந்துக் கொள்வது குறித்து அறிய முடிந்தது. அன்றே அம்மாவிடம் கூறினேன். அதுவே நாங்கள் பாட்டி வீட்டுக்கு சென்ற கடைசி முறையாகும்.
அவன் கூறியது போலவே மறுநாள் மாலை அந்த கடைக்கு சென்றேன். அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த நபருக்கு 25வயதிருக்கும்.
ஒரு கையில் முடியை பிடித்துக் கொள்ளுங்கள், மறு கையில் இமைகளை விரித்து பிடிக்கவும் என்றான். அதுபோல் செய்தேன்… ஒரு கையில் லென்ஸ் எடுத்து வைத்தவன். மறு கையில் எனது மாரை அழுத்த முயற்சித்தான். பகீர் என்றது. தெரியாமல் பட்டிருக்கும் என்று கருதினேன்.
இரண்டவாது நாள்… இரண்டாவது நாள் லென்ஸ் வைக்க சென்ற போது, அவனது முழங்கையை வைத்து எனது மாரை முட்டினான்.
சட்டென்று நகர்ந்ததும். சாரி தெரியாம பட்டிருச்சு.. என்று மன்னிப்பு கேட்டான். அப்போதே அவனை அடித்திருக்க வேண்டும்.
ஆனால், தெரியாமல் பட்டிருக்கும் என்று விட்டுவிட்டேன். மூன்றாவது நாளும் இது தொடர்ந்தது. நான்காம் நாள் அப்பாவை உடன் அழைத்து சென்றதும், அன்றில் இருந்து நீங்களே இனி லென்ஸ் வைத்துக் கொள்வது என கூறுகிறேன் என்று கற்பித்தான்.
நான் வண்டி ஒட்டிகொண்டிருந்த போது அம்மா அழைத்தாள்… வண்டியை ஓரம்கட்டி… சில நிமிடத்தில் வீட்டை அடைந்துவிடுவேன் என்று கூறி அழைப்பை கட் செய்தேன்.
திரும்பி பார்த்தால், அருகே பைக்குடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தான். அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு இடத்திற்கு வழி சொல்லுமாறு உதவி கேட்டான். நான் எப்படி செல்ல வேண்டும் என்று கூறி நகர்ந்தேன்.
ஆயினும் என்னை முன்னேறி செல்ல விடாமல், தனது வண்டியை என் வண்டி முன் வந்து நிறுத்தி எனக்கு இதுமட்டும் போதாது என்று கூறி.. மறுநொடிய எனது மார்பை பிடித்து அழுத்திவிட்டு… “நன்றாக இருக்கிறது” என்று கூறி பல்லிளித்து சிரித்தான்.
உள்ளுக்குள் பதட்டம் அதிகரித்தது. வண்டியை முறுக்கி கொண்டு திரும்பி கூட பாராமல் வெகுதூரம் வந்துவிட்டேன். நெரிசலான சாலையிலும் கூட திரும்பி பாராமல் வீடு வந்து சேர்ந்தேன்.