ஜூனியர் உலக கிண்ணத்தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி கனியை பறித்த நிகழ்வு மறக்கமுடியாதவை.
நியூசிலாந்தில் நடந்த இத்தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
அப்போது பாகிஸ்தான் அணியின் மானேஜர் நதீம் கான், டிராவிட் பாகிஸ்தான் அணியின் டிரெசிங் ரூமிற்க்கு வந்ததாக கூறியிருந்தார்.
இதற்கு விளக்கமளித்த டிராவிட், பாகிஸ்தான் அணியின் டிரெஸிங் ரூமுக்கு நான் செல்லவில்லை, பாகிஸ்தான் அணியின் இடது கை பந்து வீச்சாளரின் ஆட்டம் சிறப்பாக இருந்ததால் அவரை வெளியே நின்று பாராட்டினேன் என தெரிவித்துள்ளார்.