மகிந்தவின் குடியுரிமையும் ஸ்ரீமாவைப் போல பறிக்கப்பட வேண்டுமா?

ஸ்ரீமாவுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது போன்று மகிந்தவின் குடியுரிமையையும் பறிக்க வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு வாழைச்சேனையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டுமென்று வெளியேறியவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள், ஸ்ரீமாவுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது, அதே போன்று மகிந்தவின் குடியுரிமையும் பறிக்கப்பட வேண்டும் என கோசம் எழுப்பப்படுகின்றது.

நல்லவர்களை கொண்டு ஆட்சி அமைக்கப் போகின்றேன் என்று ஜனாதிபதியும், மறுபக்கம் ஐக்கிய தேசிய கட்சி தங்களை நிலைத்துக் கொள்வதற்காக ஒரு பக்கம் கூறுகின்றனர். இந்த கட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிறுபான்மைக் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.