சில இராசிகள் இயல்பாகவே சக்தி வாய்ந்து காணப்படும். அந்த இராசிகள் மத்தியில் சில பொதுவான குணங்கள், பண்புகள் அவர்களை வலிமையாக வைத்திருக்கும் என கூறப்படுகிறது.
அப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த ஐந்து ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா? அப்படி இருந்தால், இந்த ரகசிய குணங்கள், பண்புகள் உங்களிடம் இருக்கிறதா? அல்லது உங்களின் சக்தியாக, வலிமையாக திகழ்கிறதா? என அறிந்துக் கொள்ளுங்கள்….
மேஷம்!
இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். இதனால், கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உண்டு.
எனர்ஜி லெவல் தான் இவர்களது மைன்ஸ் பாயின்ட். மேலும். இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை இவர்கள் நிவர்த்தி செய்துக் கொண்டால் இவர்கள் தான் டாப்பில் வரலாம்.
கடகம்!
வலிமை வாய்ந்த இராசி. அன்பும், அக்கறையும் இவர்களது கூடுதல் பலம். சின்ன, சின்ன விஷயங்களை தங்கள் பாதையில் தாக்கம் ஏற்படுத்த இவர்கள் விடமாட்டார்கள்.
இவர்களது உறுதியான குணம் எதையும் வென்றுகாட்ட காரணியாக இருக்கும். இதில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சாதிக்க முடியும் என்றும் அறிந்து வைத்திருப்பார்கள்.
சிம்மம்!
ஆதிக்கம் நிறைந்த இராசி. தங்கள் ராசி பிறப்பிலேயே ஆதிக்கம் கொண்டதாக கருதுவார்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள்.
யாராக இருந்தாலும் தங்கள் பேசும் திறனால் அவர்களது பார்வையை மாற்றிவிடுவார்கள். இவர்களது ஒரே குறை என்னவென்றால் கோபம், அதிலும் ஆக்ரோஷமான கோபம் ஆகும்!
விருச்சிகம்!
விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே தீவிரமாக செயற்படுபவர்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை ஓயாமால் பின்தொடர்வார்கள். கடுமையாக உழைக்க கூறுவார்கள். மேலும், இவர்களை சுற்றி இருக்கும் மக்கள், இவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள்.
அன்புடன், அன்பின் வழியில் நடப்பார்கள். எதையும் கலந்தாய்வு செய்து, ஆராய்ந்து கணக்கிடுவதில் இவர்கள் கில்லி.
கும்பம்!
அறிவாற்றல் காரணத்தால் வலிமையான ராசியாக திகழ்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். வயதுக்கு அதிகமான ஸ்மார்ட்னஸ் இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயற்படுவார்கள்.
அசௌகரியமான சூழலில் இருந்து தங்களை தாங்களே வெளிக் கொண்டுவருவதில் சிறந்து திகழ்வார்கள்.