சாதாரணப் பெண் ஏழு நாட்கள் இளவரசியாக!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரித்தானிய இளவரசி கேட்டைப்போல ஒரு வாரம் வாழ்ந்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

26 வயதான Rebecca Nelson, அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.

ஒரு ஆய்வுக்காக அவர் ஒரு வாரம் இளவரசி கேட்டைப்போல வாழ்வதற்கு முன்வந்தார்.

முதல் நாள் அவருக்கு கொடுக்கப்பட்ட taskகே அவரைக் களைப்படையச் செய்துவிட்டது. இளவரசி போல கடுமையான உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும், இதனால் திணறிப்போனாராம் Rebecca.

அடுத்ததாக பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இளவரசிக்கு கொடுக்கப்படும் வகுப்புகளில் கலந்து கொள்ளவேண்டும்.

ஒரு இளவரசி எப்படிப் பேச வேண்டும், எத்தகைய நெயில் பாலிஷ் போடவேண்டும், பொது இடங்களில் உட்காரும்போது எப்படி உட்காரவேண்டும், ஏன் காரிலிருந்து இறங்கும்போது உள்ளாடை தெரியாமல் எப்படி கவனமாக இறங்கவேண்டும் என்பது வரை அங்கு கற்றுக்கொடுக்கப்பட்டதைக் கண்டு Rebecca ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்.

தனக்குக் கற்றுக் கொடுத்தவரிடம் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபோது, அவர் ஒரு பெண்ணாக அல்ல ஒரு தேசத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றார் பயிற்சியாளர்.

இளவரசி கேட்டைப் போலவே உடையணிந்து புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. அந்த நேரங்களில் தான் மிகவும் ”posh”ஆக உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார், Rebecca.

விலையுயர்ந்த நகைகள், மக்களின் அன்பும் ஆதரவும் என ஒரு இளவரசியைப்போல் வாழ வேண்டும் என்னும் ஆசை பலருக்கும் இருக்கும்.

ஆனால் அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது என்னும்போது இளவரசிப் பதவியா, ஆளை விட்டால் போதும் என்று இருக்கிறது என்கிறார் Rebecca.