தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரி! காப்பாற்றிய மைத்திரி!

லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லண்டனிலுள்ள தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டு பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த நான்காம் திகதி சுதந்திர தினத்தின் போது, தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுதை அறுக்கப் போவதாக பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ அச்சுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.