இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவே உள்ள Santa Cruz del Islote எனும் கரீபியன் தீவுதான் உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட தீவு ஆகும்.
இதன் பரப்பளவு வெறும் 2.47 ஏக்கர் மட்டுமே, இங்கு 97 வீடுகளில் 18 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,247 பேர் கடும் நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.
இந்த தீவில் ஒரு பள்ளியும், உணவகமும் ஒரு சிறிய துறைமுகத்தில் நடத்தப்படுகிறது, இங்குள்ள மக்கள் அருகில் இருக்கும் தீவுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
சிறிய தீவில் மிகுந்த இட நெருக்கடியில் வாழ்ந்தாலும் ஒரு சமூகமாக அவர்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விளக்குகின்றன.