வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த தச்சு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கலன்பிந்துனுவெவ துட்டுவெவ பிரதேசத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
துட்டுவெவ பிரதேசத்தில் வீடொன்றில் திருமணமாகாத 57 வயதான பெண் வசித்து வருகிறார்.
அவரது வீட்டுக்குள் இன்று அதிகாலை புகுந்த தச்சு தொழிலாளி ஒருவர் அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
அப்போது பெண் தன்னை தற்காத்து கொள்ள குறித்த நபரை கோடாரியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக கலன்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.