14 வயது சிறுமி தாலியை மறைத்து ஒரு வருடமாக பள்ளிக்கு வந்த அவலம்!

தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, கணவர் கட்டிய தாலியை ஒரு ஆண்டாக மறைத்து அணிந்த நிலையிலேயே சிறுமி பள்ளிக்கூடத்துக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கூடத்தில் யாரோ ஒருவர் சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை கண்டு இதுகுறித்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மூத்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.