தந்தையின் ஈமச்சடங்கின் போது சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி நம்பியார், இவர் தனக்கு சொந்தமான அரை ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டார்.
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதை கண்டு சோகத்தில் வயிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நம்பியாரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்த மகன் நல்லசாமிக்கு கடன் தொல்லையும் அதிகரித்தது.
இந்நிலையில் தந்தையின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக திருப்புவனம் வைகை ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கே மாரடைப்பால் நல்லசாமியும் காலமானார், அடுத்தடுத்த உயிரிழப்புகளால் நம்பியாரின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
நல்லசாமிக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்நிலை நீடிக்காமல் இருக்க கருகிய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.